Thursday, July 1, 2010

மஹதி ஆயுஷ்யஹோமம்


என் அம்மா, மாமனாருடைய ஆசிர்வாதம் மற்றும் பெரியவர்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் மஹதி ஆயுஷ்யஹோமம் மிக சிறப்பாக நிறைவு பெற்றது. என் அப்பாவுக்கு எங்கள் முதல் நன்றி. நாங்கள் Pune யில் இருப்பதால், பத்திரிகை அடித்து, மண்டபம் பார்த்து, catering arrange செய்து, வாத்தியாரிடமிருந்து ஹோமத்திற்கு வேண்டிய list ஐ வாங்கி, சாமான்களையும் வாங்கி வைத்து என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்.

அடுத்த நன்றி கருணாநிதிக்கு சொல்ல வேண்டும் :-) உலக தமிழ் செம்மொழி மாநாடு - இதனை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை. விடுமுறை இல்லை என்றால், எவ்வளவு குழந்தைகள் leave எடுத்துக்கொண்டு வந்து இருப்பார்கள் என தெரியாது.
ஆக, அயுஷ்யஹோமத்திற்கு குழந்தைகளின் எண்ணிக்கை 26. எல்லா குழந்தைகளும் மண்டபத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். பார்க்கவே மிக நன்றாக இருந்தது. Function க்கு குழந்தைகளையும் சேர்த்து 90 பேர் வந்தனர்.

Office ல் இவருக்கு leave அதிகம் இல்லாததால், நாங்கள் 22nd இரவு தான் சென்னை வந்து சேர்ந்தோம். அதற்கு முதல் நாளே அப்பா லட்டு, முறுக்கு, திரட்டு பால் - கடையில் order செய்தாச்சு. சுதா வீட்டிலேயே மைசூர் பாக் பருப்பு தேங்காய் செய்து விட்டாள். நன்றாக இருந்தது. சுதா மற்றும் ஷோபு அக்கா இருவரும் சேர்ந்து காப்பரிசியும் செய்தனர். எல்லாம் நன்றாக் இருந்தது. நாங்கள் வந்த ladies எல்லோர்க்கும் தாம்பூலப்பையில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமத்துடன் ஒரு fancy plastic dabba gift ஆக வாங்கி இருந்தோம்.

23rd காலை தாம்பூலப்பை தயார் செய்து விட்டு, நாங்கள் மதியம் ரேவதி அக்கா(என் நாத்தனார்) வீட்டிற்கு சென்றுவிட்டோம். எங்களுடன், தனுஷும் வந்தான். சுகோஷ், தனுஷ், ஷ்ரேயா மூவரும் ஒரே ஆட்டம் தான். அப்பா இரவு 8 மணிக்கு வந்து தனுஷை அழைத்துக்கொண்டு போனார்.

24th காலை 4.30 மணிக்கே நாங்கள் எழுந்தாச்சு. 5.15 மணிக்கு சுகோஷும் எழுந்தான். அவனைக் கிளப்பியபிறகு, மஹதியை எழுப்பினேன். 6-7:30 எமகண்டம் என்பதால், அதற்கு முன்னாலேயே குழந்தைக்கு எண்ணெய் வைத்து, ஆரத்தி எடுத்துக் குளிப்பாட்டி விட்டாச்சு. 6:15 மணிக்கு நான் அப்பா வீட்டிற்கு சென்று, சுதாவின் உதவியுடன் மடிசார் கட்டிக்கொண்டு, திரும்ப நாத்தனார் வீட்டிற்கு வந்து, மஹதிக்கு final dressing செய்து, மண்டபத்திற்குக் கிளம்பினோம். 6:45 மணிக்கே அப்பா, மாமியார், நாத்தனார் மகள் சாரதா, முன் ஏற்பாடுகள் செய்ய மற்றும் வருபவர்களை வரவேற்க மண்டபத்திற்குச் சென்றுவிட்டனர்.

Function 7:40 மணிக்குத் துடங்கி, 9:30க்கு நிறைவு பெற்றது. மண்டபம் ஒரு mini AC hall. ஒரு சின்ன function க்கு நல்ல இடம். 100 பேர் வரை easy ஆக accomodate செய்யலாம். exhaust fans 5-6 இருந்ததால், ஹோம புகை யாருக்கும் இடஞ்சல் இல்லாமல் இருந்தது. எல்லோரும் இருந்த இடத்திலேயே இருக்க முடிந்தது.

அப்பா எங்களுக்கு பட்டுப் புடவை, வேஷ்டி சட்டை, சுகோஷுக்கு shervani மற்றும் மஹதிக்கு பட்டுப் பாவாடை, party wear frock, ஜிமிக்கி, வளையல், வெள்ளித்தட்டு மற்றும் வெள்ளி straw tumbler வாங்கிக் கொடுத்தார். அம்மாவின் ஒரு necklaceம் கொடுத்தார். அப்பாவே குழந்தைக்கு மாலை போட்டு, வளையல் மற்றும் necklace போட்டு விட்டார். அப்பா வாங்கிக் கொடுத்த பாவாடையை மஹதிக்குப் போட்டுவிட்டு, மாமா (அருண்) மடியில் உட்கார வைத்து, ஏற்பாடு செய்திருந்த தட்டானை வைத்து காது குத்தினோம். ரொம்ப அழுகை இல்லை, ஆனால் மதியம் வரை யாரிடமும் செல்லவில்லை. குட்டி ஜிமிக்கியுடன் மஹதி மிக அழகாக இருக்கிறாள்.

சாப்பாடு 4-5 பந்தியில் முடிந்தது. சாப்பாடும் நன்றாக இருந்தது. எல்லோரும் கிளம்பிய பின், caterer மற்றும் மண்டபத்திற்கு பணம் settle செய்து, அப்பா சந்தர் அத்திம்பேருடன் வீட்டிற்கு சென்றார். Arvind எங்களை ரேவதி அக்கா வீட்டில் விட்டு சென்றான். மறு நாள் மாலை அப்பா வீட்டிற்கு வந்தோம். ஒரு நாள் அங்கும் இருந்துவிட்டு, 27th காலை Pune வந்து சேர்ந்தோம். சுகோஷ் சென்னை பயணத்தை நன்கு அனுபவித்தான். தனுஷ், ஷ்ரேயாவுடன் நன்கு ஆட்டம் போட்டான்.

நேரில் வந்து மற்றும் phone/sms/email வழியாக எங்களுக்கு ஆசிர்வாதம் செய்த அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மஹதிக்கு இன்னும் மொட்டை அடிக்கவில்லை. July 4th date of birth முடிந்த பின், இங்குள்ள நாராயண்புர் சென்று மொட்டை அடிக்கலாம் என்று இருக்கிறோம். இனிமேல்தான் நாள் பார்க்க வேண்டும்.

6 comments:

Vasudevan Sundaresan said...

வெகு அழகாக, நேர்த்தியாக எல்லா விவரங்களுடன் எழுதி உள்ளாய்.

படித்தவுடன், எல்லாவற்றையும் நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு வந்தது.

நன்றிகள் பல....

சுரேஷ்

Suba Magesh said...

Thank you very much anna.

Unknown said...

super manni!

Unknown said...

beautifully written blog.Guess everyone had a very great time together..we missed it :(

Unknown said...

மிக அருமையான வர்ணனையுடன் மஹதியின் அயுஷ்யஹோமத்தை ஆரம்பம் முதல் நிகழ்ச்சி முடியும் வரை அற்புதமாக வரைந்துள்ளாய். மஹதிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளும், ஆசிர்வாதங்களும்..

உன் அன்பு - R(3)

Suba Magesh said...

@Sharada, Janani, Ravi :Thanks a lot :) My other blog follows shortly :)